நடராஜனை விட முடியாது. அவர் இந்த வருடமும் எங்கள் அணிக்காக விளையாடுவார் – அணி நிர்வாகம் அறிவிப்பு

Nattu 1

2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்ற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்தத்தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Rohith

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Nattu

அந்த வகையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் இந்த ஐ.பி.எல் தொடருக்கான அணியில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை தக்கவைத்து கொள்வதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் பல முன்னணி வீரர்களை வீழ்த்தினார். இதன்காரணமாக ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வாகி மூன்று வகையான இந்திய அணியிலும் அறிமுகமாகி அசத்தினார்.

- Advertisement -

Nattu-2

இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அவர் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட போவதை அறிவித்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தொடரிலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.