ஹைதராபாத் அணியை கிண்டல் செய்த கோலி ..! மாஸ் காட்டி பதிலடி கொடுத்த தவான் ..! – காரணம் இதுதான்..?

dhawan
- Advertisement -

ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்பியுள்ளது, அதனால் தான் அந்த அணி வெற்றி பெற்று வருகிறது என்று கூறிய கோலிக்கு தக்க பதிலளித்தது ஹைதராபாத் அணி. ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணி விளையாடிய போட்டி, டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி நிர்ணையித்த வெற்றி இலக்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.

Virat

- Advertisement -

சமீபத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி நடந்த போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாத் அணியிடம் மோதியது. அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி ஹைட்ரபாத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 141 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டிக்கும் பின்னர் பேட்டியளித்த பெங்களூர் அணியின் கேப்டன் கோலி ” ஹைதராபாத் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு மட்டும் தான் நன்றாக இருக்கிறது. அதனை நம்பித்தான் அந்த அணியுள்ளது. பந்துவீச்சாளர்களை வைத்து தான் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது ” என்று அந்த அணியை கிண்டல் செய்யும் விதத்தில் பேசியிருந்தார்.

dhawan1

கோலியின் இந்த கிண்டலான விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது நேற்றைய போட்டி. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயித்த 187 என்ற இலக்கை ஹைதராபாத் அணி 1 விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து, தவான் மற்றும் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கள் அணி பேட்டிங்கிலும் பலம் வாய்ந்த அணிதான் என்று நிரூபித்துள்ளது ஹைதராபாத் அணி.

Advertisement