ராஜஸ்தானிடம் மண்ணை கவ்விய ஹைதெராபாத் பரிதாப தோல்வி – மோசமான வரலாற்று சாதனை

RR vs SRH
Advertisement

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மார்ச் 29-ஆம் தேதி புனே நகரில் நடந்த 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 58 ரன்கள் குவித்தனர்.

RR vs SRH Preview

இதில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 20 (16) ரன்களில் அவுட்டாக அவருடன் விளையாடிய ஜோஸ் பட்லர் 35 (28) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதைவிட அதிரடியாக விளையாடி வெறும் 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு 55 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் சரவெடி பேட்டிங்:
அவருடன் விளையாடிய தேவுட் படிக்கல் 29 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் தன் பங்கிற்கு வெறும் 13 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 32 ரன்கள் எடுத்து வெறித்தனமான பினிஷிங் கொடுத்தார். இப்படி களமிறங்கி அனைத்து வீரர்களும் சரவெடியாக பேட்டிங் செய்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த ராஜஸ்தான் 210 ரன்கள் குவித்து அசத்தியது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 211 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களில் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த அப்துல் சமத் வெறும் 4 ரன்களில் அவுட்டானார். இப்படி ஹைதராபாத் அணியின் டாப் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 10 ஓவர்களில் 37/5 என திண்டாடிய ஹைதராபாத் அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

ராஜஸ்தான் மாஸ் வெற்றி:
அந்த அளவுக்கு அபாரமாக பந்துவீசிய ராஜஸ்தானுக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறிய ஹைதராபாத் 100 ரன்களை தொடுமா என எதிர்பார்த்த நிலையில் நடுவரிசையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 57* ரன்கள் எடுத்து கடைசிவரை வெற்றிக்காக போராடினார்.

Sanju Samson SRH

அவருடன் 18 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட ரொமோரியா செபார்ட் 24 ரன்களும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் வெறும் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்த போதிலும் அது ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உதவாமல் போனது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்த ஹைதராபாத் 149 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய அதிகபட்சமாக யூஸ்வென்ற சஹால் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதன் வாயிலாக 63 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் இந்த வருடம் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

- Advertisement -

மண்ணை கவ்விய ஹைதெராபாத்:
முன்னதாக இந்த போட்டியில் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கிய ஹைதராபாத் சேசிங் செய்த போது பிட்ச் பேட்டிக்கு சாதகமாக இருந்தபோதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக படு மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக 211 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய அந்த அணியின் தொடக்க வீரர் கேன் வில்லியம்சன் 2-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா பந்தில் 2 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிபாதியையும் பிரசித் கிருஷ்ணா டக் அவுட் செய்தார். அந்த நேரத்தில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 9 பந்துகள் சந்தித்தபோது 4-வது ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் பந்தில் டக் அவுட்டானார். மொத்தத்தில் பவர் பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் பரிதாப தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது.

SRH vs RR

குறிப்பாக பவர்பிளே முடிவில் அதாவது 6 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பவர்ப்ளே ஓவர்களில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான வரலாற்றுச் சாதனையை ராஜஸ்தான் அணியுடன் ஹைதெராபாத் பகிர்ந்து கொண்டுள்ளது.

இதையும் படிங்க : நீங்க வேனா பாருங்க. இந்தமுறை ஐ.பி.எல் சாம்பியன் நாங்கதான் – அடித்துக்கூறும் இந்திய ஸ்பின்னர்

ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து அணிகளின் விபரம் இதோ:
1. சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் : 14/3 – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, 2022*
2. ராஜஸ்தான் ராயல்ஸ் : 14/2 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக, 2009.
3. சென்னை சூப்பர் கிங்ஸ் : 15/2, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக, 2011.

Advertisement