நீங்க வேனா பாருங்க. இந்தமுறை ஐ.பி.எல் சாம்பியன் நாங்கதான் – அடித்துக்கூறும் இந்திய ஸ்பின்னர்

IPL 2022 (2)
Advertisement

ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பையில் மார்ச் 26 ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து வீரர்களும் தற்போது ஏலத்தின் அடிப்படையில் மற்ற அணிகளுக்கு சென்றுள்ளதால் அனைத்து அணிகளும் சமமான பலம் கொண்ட அணிகளாகவே திகழ்கின்றன.

SRH vs RR

இதனால் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 113 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள மிகப்பெரிய அனுபவம் கொண்ட வீரர் யுஸ்வேந்திர சாஹல்.

- Advertisement -

பெங்களூர் அணிக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக விளையாடி வந்த அவரை அந்த அணி தக்க வைக்காமல் அணியில் இருந்து விடுவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தின் போது கூட அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதனை சரியாக பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 6.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தற்போது ராஜஸ்தான் அணியில் விளையாட வைத்து வருகிறது.

Chahal

இந்த புதிய அணியான ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஏனெனில் துவக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் மற்றும் பவுலர்கள் என அனைவருமே ராஜஸ்தான் அணியில் தற்போது மிகச் சிறந்த வீரர்களாக உள்ளனர். இவை அனைத்தும் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் ராஜஸ்தான் அணி இந்த முறை முழு பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.

- Advertisement -

அதோடு இம்முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற கூடிய தகுதியுள்ள அணியாகவும் ராஜஸ்தான் அணி இருப்பதாகவும் தான் கருதுவதாகவும் இந்த ஆண்டு நிச்சயம் எங்களுக்கு தான் ஐபிஎல் கப் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : துல்லியத்துக்கு பெயர் போன புவி இஸ் பேக்! ஐபிஎல் வரலாற்றில் புதிய அபார சாதனை – என்ன தெரியுமா?

அவர்கூறியது போலவே நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கூட ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் 210 ரன்களை குவித்து இருந்தது. அதோடு பந்துவீச்சில் அசத்திய அவர்கள் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தனர். இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 4 ஓவர் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement