சன் ரைசர்ஸ் அணியில் இடம்பிடிக்க இருக்கும் சீனியர் வீரர் – இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ

SRH

நடப்பு ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் மேட்ச் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த ஐபிஎல்லின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கிறது ஹைதராபாத் அணி.

nattu 1

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் மும்பை அணி வலுவான பவுலிங் அட்டாக்கை வைத்துள்ளது. ஹைதராபாத் அணியும் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை வைத்துள்ள போதும், அவர்களால் ஒரு சீரான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் வீரர்கள் எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்பதை கணிக்கவே முடியவில்லை.

மேலும் அந்த அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாகவே உள்ளது. அதனை சரிசெய்ய இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கேன் வில்லியம்சன் உள்ளே வந்தால் ஜானி பேர்ஸ்டோ பெஞ்சில் அமர வைக்கப்படுவார். மேலும் விஜய் சங்கர் தொடர்ந்து மோசமாக இளையாடி வருவதால் அவருக்கு பதிலாக கேதார் ஜாதவ் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Williamson

மேலும் மிடில் ஆர்டரில் அடிக்கடி சரிவை சந்திக்கும் சன் ரைசர்ஸ் அணி சரிவை தடுத்து நிறுத்தும் வகையில் கேன் வில்லியம்சன் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

williamson 1

ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவன்ஸ்:

டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அப்துல் சமாத், முஹம்மத் நபி, ரஷித் கான், புவனேஷ் குமார், சந்தீப் சர்மா, நடராஜன்.