ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர். சிக்கலில் முக்கிய அணி – விவரம் இதோ

Marsh-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதரபாத் அணிகள் மோதின. இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று பெங்களூர் அணி ஒரு வழியாக வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது அந்த அணியில் இரண்டு வீரர்கள் அரைசதம் அடித்தார்.

shankar

- Advertisement -

அதனை எடுத்து 164 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி கடைசி வரை நன்றாக விளையாடிய கடைசி 20 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து போட்டியை பெங்களூரு அணி வீரர்களிடம் எளிதாக எடுத்துக் கொடுத்துவிட்டு சென்று விட்டது. 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது முதலில் ஹைதராபாத் அணி பந்து வீசி கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிச்செல் மார்ஷ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

marsh

இந்த போட்டியில் பந்து வீசிய அவருக்கு அவருடைய இரண்டாவது ஓவரில் போது திடீரென்று காலில் சுளுக்கு ஏற்பட்டு மைதானத்தில் படுத்து சுருண்டு விழுந்து வலியால் துடித்தார். இந்த காயம் வெகு சீக்கிரத்தில் சரியாகாது என்றும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி விடுவார் என்றே பார்க்கப்படுகிறது.

Marsh 1

இதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரை அவர் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் சன் ரைசர்ஸ் பெரிய இழப்பாக மாறும். இருப்பினும் அந்த அணியில் உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் முஹமது நபி இருப்பதால் அந்த அணி சற்று ஆறுதலடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement