காயமடைந்து வெளியேறிய மார்ஷுக்கு பதிலாக சன் ரைசர்ஸ் அணியில் இணையவுள்ள வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதரபாத் அணிகள் மோதின. இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று பெங்களூர் அணி ஒரு வழியாக வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது அந்த அணியில் இரண்டு வீரர்கள் அரைசதம் அடித்தார்.

shankar

அதனை எடுத்து 164 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி கடைசி வரை நன்றாக விளையாடிய கடைசி 20 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து போட்டியை பெங்களூரு அணி வீரர்களிடம் எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டு சென்று விட்டது. 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது முதலில் ஹைதராபாத் அணி பந்து வீசி கொண்டிருந்தது. அப்போது ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் பந்து வீசிய அவருக்கு அவருடைய இரண்டாவது ஓவரின் போது திடீரென்று காலில் சுளுக்கு ஏற்பட்டு மைதானத்தில் படுத்து சுருண்டு விழுந்து வலியால் துடித்தார். இதனால் பின்னர் பவுலிங் செய்ய வரவில்லை. பேட்டிங்கின் போதும் இறுதியில் இறங்கியே ஆக வேண்டும் என்ற அவசியத்தில் இறங்கிய அவர் வலியுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Marsh 1

இந்த காயம் வெகு சீக்கிரத்தில் சரியாகாது என்றும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி உள்ளார். இதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரை அவர் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் சன் ரைசர்ஸ் பெரிய இழப்பாக மாறும். இருப்பினும் அந்த அணியில் உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் முஹமது நபி இருப்பதால் அந்த அணி சற்று ஆறுதலடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Holder

இந்நிலையில் காயம் காரணமாக விலகிய அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான ஹோல்டரை அவருக்கு மாற்று வீரராக சன்ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது. விரைவில் அணியுடன் இணைய இருக்கும் இவர் சன்ரைசர்ஸ் அணியின் திருப்புமுனை வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது. பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்த கூடியவர் ஜேசன் ஹோல்டர் என்பதை நாம் பல முறை ஐபிஎல் போட்டிகளில் கண்டதும் உண்டு.