வெற்றிக்காக முடிவை மாற்றி தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொண்ட சன் ரைசர்ஸ் – அசத்திய சி.எஸ்.கே படை

CSKvsSRH

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியிலாவது சன்ரைசர்ஸ் அணி தங்களது தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களது சோகம் தொடர்ந்துள்ளது.

pandey

அதேவேளையில் சென்னை அணி இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஓரளவு சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை குவிக்க அதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சென்னை அணியின் துவக்க வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்த இலக்கினை அசாத்தியமாக சேசிங் செய்ய முக்கிய காரணமாக அமைந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைக்க இறுதியில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18வது ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மற்றும் தோல்வி அடைந்து மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

faf

அதேவேளையில் கடந்த ஐந்து போட்டிகளிலும் சேசிங் செய்ய கடினமாக இருக்கிறது என்ற காரணத்தினால் இந்த முறையாவது முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பை எடுத்து வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்கிறோம் என்று தேர்வு செய்ய அந்த முடிவே அவர்களுக்கு தற்போது ஆபத்தில் முடிந்து விட்டது. ஏனெனில் துவக்கம் முதலே பெரிய அளவு ரன் ரேட்டுடன் விளையாட முடியாமல் சுமாராகவே விளையாடி வந்த சன்ரைசர்ஸ் இறுதியில் சமாளித்து 171 ரன்களை அடித்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.

- Advertisement -

SRH

இந்த தொடரில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரி அவர்களுடைய பேட்டிங் ஆர்டர் முழுவதும் முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தாங்கி நிற்பதால் அவர்களால் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் மீண்டும் ஒரு முறை தோல்வி பெற்று இந்த தொடரில் ஐந்து தோல்விகள் உடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சன்ரைசர்ஸ் அணி பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் மங்கி விட்டது என்றே கூறலாம்.