சன் ரைசர்ஸ் அணிக்கு இனியும் இவர் தேவையா ? இவரால் தான் ஐதராபாத் அணி தோற்றது – கழுவி ஊற்றிய ரசிகர்கள்

SRH

ஐபிஎல் சீசன் 14ஆவது தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் அடித்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியால் 177 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது எனவே ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

kkr

இந்தப் போட்டியில் ஹைதராபாத்தின் மிடில் ஆடர் மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமாக நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாதது ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. மேலும் ஹைதராபாத் அணி நம்பும் தமிழக ஆட்டக்காரரான விஜய் சங்கர் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ஃபர்பாமன்ஸை வெளிப்படுத்தவில்லை.

பேட்டிங்கில் அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்குப் பின் வந்த சமத்தை இவரின் இடத்தில் ஆடவிட்டிருந்தால் வெற்றியானது ஹைதராபாத் வசம் வந்திருக்குமோ என்னமோ. மிடில் ஆர்டரில் இறங்கிய விஜய் சங்கர் அடித்து ஆடவேண்டிய நேரத்தில் 7 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். போட்டியை சரியான விதத்தில் அவர் பினிஷ் செய்யவில்லை.

Shankar-1

இந்நிலையில் ஆல்ரவுண்டரான நேற்று இவர் பந்துவீசிய முறையும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஏனெனில் இவர் ஸ்பின்னர்கள் வீசும் ஸ்பீடிலேயே பந்துகளை வீசினார். இவர் மீடியம் பாஸ்ட் பௌலரா அல்லது ஸ்பின்னரா என்ற கேள்வி எழும்பும் வகையில்தான் இவரின் பௌலிங்கும் இருந்தது.

- Advertisement -

shankar

இவரின் இந்த செயல்களைப் பார்த்த ஐதராபாத் ரசிகர்கள் இவரையெல்லாம் எதற்கு இன்னும் அணியில் வைத்துள்ளார்கள்? இவருக்கு கிரிக்கெட் ஆடத் தெரியுமா? என்றெல்லாம் வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பிக் கொண்டுள்ளனர்.