வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இந்த விடயத்தில் கில்லாடிகள். பயிற்சியாளர் பெருமிதம் – விவரம் இதோ

Srh

வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தம் 53 நாட்கள் 60 போட்டிகள் துபாய் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மைதானங்களில் நடக்க இருப்பதாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

ipl

இதற்காக ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள் ,ஊழியர்கள் டெக்னிக்கல் வேலையாட்கள் என அனைவரும் தங்களது பயணத்தை வரும் 20ம் தேதி முதல் துவங்க இருக்கிறார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத், டெல்லி கேப்பிடல் அணியின் வீரர்கள் தங்களது பயிற்சிகளை துவக்கி விட்டார்கள்

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பிஜு ஜார்ஜ் அந்த அணியின் மிகச்சிறந்த பீல்டர்கள் பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

சன் ரைசர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சிகள். எனது பணியை சரியாக செய்ய காத்திருக்கிறேன். இந்த அணியில் இருக்கும் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறந்த பீல்டர்கள் இல்லை, மிகச்சிறந்த பீல்டர்கள் ஆவர்கள்.

- Advertisement -

SRH

மேலும், இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா உலகின் மிகச்சிறந்த பீல்டர்கள் என்றும் தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன் எங்கு அடிப்பார் என்று முன்னரே தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது இயக்கத்தை வைத்து பீல்டிங் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார் பிஜு ஜார்ஜ் .