
2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் கேப்டனாக இஷான் கிஷன் செயல்படுவார் என்று ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஏனெனில் 2026 டி20 உலக கோப்பை தொடரை காயம் காரணமாக தவறவிட்ட பேட் கம்மின்ஸ் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதன் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவறிவிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த தொடரின் பாதியில் அவர் இணையும் போது மீண்டும் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுவரை சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷனும் துணை கேப்டனாக அபிஷேக் ஷர்மாவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கேப்டனாக அவரை தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சில விளக்கங்களை அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இஷான் கிஷன் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். அதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதேபோன்று ஏற்கனவே ஜார்கண்ட் அணியை சையத் முஷ்டாக் அலி தொடரின் போது கேப்டனாக வழிநடத்தி கோப்பையையும் வெற்றிபெற்று கொடுத்துள்ளார். எனவே அந்த கேப்டன்சி அனுபவத்தையும், அவரது ஐபிஎல் அனுபவத்தையும் வைத்தே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
இதையும் படிங்க : இன்றைய முதல்நாள் துவக்க விழாவை ரத்து செய்த பி.சி.சி.ஐ.. கொண்டாட்டங்கள் கிடையாது – காரணம் என்ன?
கடந்த சீசனிலேயே அவர் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமை குழுவில் இடம்பெற்று இருந்தார். மைதானத்தில் அவரது துடிப்பு மற்றும் வேகம் இளம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையிலும் இருந்து வருகிறது எனவேதான் அவரை கேப்டனாக மாற்றி உள்ளோம் என டேனியல் வெட்டோரி கூறியது குறிப்பிடத்தக்கது.