- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பவர்பிளே ஓவர்களிலேயே எல்லாம் முடிஞ்சி போச்சு.. 3ஆவது போட்டியின் தோல்விக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

3 ஆவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய : ஷ்ரேயாஸ் ஐயர்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குடித்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி :

- Advertisement -

11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் :

எங்களுடைய ஆட்டம் இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்ததாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதைவிட சரியான வார்த்தை என்னிடம் இல்லை. பவர்பிளேவிலேயே அதிகப்படியான விக்கெட்டுகளை நாங்கள் இழந்து விட்டோம். நாங்கள் நிச்சயம் மோசமாக விளையாடினோம் என்பதை கூற விரும்புகிறேன். ஆனால் இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மிகச் சிறப்பாக திரும்புவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் இரண்டாவது படுமோசமான தோல்வியை பதிவு செய்த இந்திய அணி – விவரம் இதோ

வீரர்கள் அடிப்படையான விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். போட்டியில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவது? அணிக்காக எப்படி வெற்றியை பெற்று தருவது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் சுயமாக சிந்தித்து போட்டிகளில் எவ்வாறு வெற்றிபெற முடியும் என்பதை பார்த்து அந்த பொறுப்பை கையில் ஏற்க வேண்டும் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -