இவரை மாதிரி ஒரு பயிற்சியாளரை பார்க்கவே முடியாது. புகழ்ந்து தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர்

shreyas iyer

ஐபிஎல் தொடரில் கடந்த 12 வருடங்களாக விளையாடி வரும் டெல்லி அணி, டெல்லி கேப்பிட்டல், டெல்லி டேர்டெவில்ஸ் என்று பல வருடங்கள் விளையாடிவிட்டு கடந்த மூன்று வருடமாக இந்த பெயரில் விளையாடி வருகிறது. பல திறமையான வீரர்களை கொண்டு இருந்தாலும் இந்த அணியால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. ஒரே ஒருமுறை பிளே ஆப் சுற்றுக்கு வந்திருக்கிறது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை போலவே இந்த அணியும் சிறந்த வீரர்களை வைத்திருந்தும் கோப்பை வெல்ல முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த அணிக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட உடன் அணியின் செயல்பாடுகள் முற்றிலும் மாறியது அணியில் பல இளம் வீரர்களை கொண்டு வந்து சேர்த்தார். கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் நீக்கிவிட்டு இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்க ரிக்கி பாண்டிங் காரணமாக இருந்தார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ரிக்கி பாண்டிங் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

எங்களுக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கிடைத்ததை நான் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறுவேன். அவர் ஒரு ஜாம்பவான் மூத்த வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை அனைவரையும் சரிசமமாக அரவணைத்து செல்கிறார். யார் யாருக்கு எந்த மாதிரியான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.

Ricky-Ponting

எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பான திறமையானவர்கள் நாங்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தி இந்த வருட கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர்.

- Advertisement -