தோனியை விமர்சிக்காமல் அவரது உழைப்பிற்கு ஆதரவை தாருங்கள் – இந்திய வீரர் வேண்டுகோள்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

srhvscsk

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

srh

இந்நிலையில் இந்தப் போட்டியில் 165 ரன்களை எதிர்த்து சென்னை அணி விளையாடும் போது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து பரிதவிக்க ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார்கள். சற்று நேரம் அதிரடி காட்டிய ஜடேஜா 50 ரன்களில் வெளியேறி போது சாம் கரனுடன் தோனி கைகோர்த்து வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

18-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு முறை 2 ரன்களை ஓடிய தோனி அதன்பிறகு குனிந்தபடி மூச்சு வாங்கி கஷ்டப்பட்டார். மேலும் அங்கே அவர் மிகப்பெரிய கஷ்டத்தில் இருப்பது நமக்குத் தெரிய வந்தது. குனிந்த படி மூச்சு வாங்கிய தோனியால் முடியவில்லை என்பது தெரிந்தது. மேலும் உடனே மைதானத்திற்குள் முதல் உதவிகளை மேற்கொள்ள உதவி நிர்வாகிகளும் உள்ளே வந்தனர். பிறகு பெயின் கில்லர் மாத்திரைகளையும் தோனி எடுத்துக் கொண்டார்.

dhoni 1

இதை பார்த்த ரசிகர்களுக்கு தோனியின் இந்த நிலை மிகவும் வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் வழக்கம்போல தோனியின் இந்த ஆட்டத்தையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனி நேற்றைய போட்டியில் விளையாடியது குறித்து ஆதரவாக ஒரு கருத்தினை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

“ஹேட்ஸ் ஆப் தோனி” இந்த வெப்பத்திலும் 20 ஓவர்கள் கீப்பிங் செய்து அணிக்காக நிறைய ரன்கள் ஓடி எடுத்துள்ளீர்கள். பொறுப்புடன் விளையாடிய உங்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் உங்களுக்கான ஆதரவு தருகிறோம். நாங்கள் எப்போதும் கைவிட மாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement