இந்த வருட ஐ.பி.எல் தொடருக்காக ஸ்ரீசாந்தை ஏலத்தில் எடுக்க விரும்பும் 3 அணிகள் – விவரம் இதோ

Sreesanth
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் வெற்றிகரமாக திகழ்ந்தவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த். இவரது ஆக்ரோஷம் கலந்த வேகப்பந்து வீச்சுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஸ்ரீசாந்த் 2011ஆம் ஆண்டு வரை 53 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரீசாந்த் 2011ஆம் ஆண்டு வரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Sreesanth 1

மேலும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இப்படி இந்திய அணிக்காக அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட சூதாட்ட பிரச்சனை காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ ஆல் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.

- Advertisement -

பின்னர் அதை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்து வெற்றி பெற்ற ஸ்ரீசாந்த் மீண்டும் ஏழு ஆண்டு கால தடைக்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் சையது முஷ்டாக் அலி தொடரில் கேரள அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளை வீழ்த்திய வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது மீண்டும் தடையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தற்போது கேரளா அணிக்காக விளையாடி வரும் இவர் இன்னும் அதே சிறப்பான வேகத்தில் பந்து வீசி வருகிறார். அதேநேரத்தில் இனம் வீரர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும் இவரது பழைய வேகமும் துல்லியமும் இப்போதும் குறையவில்லை. 37 வயதாகும் ஸ்ரீசாந்த் இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று அவரை ஏலம் எடுக்க சில அணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஸ்ரீசாந்த்தை ஏலம் எடுக்க பரிசீலனை செய்ய முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement