ஐ.பி.எல் ஏலத்தில் தடைசெய்யப்பட்ட இந்திய வீரர். இறுதி பட்டியலிலும் பெயர் இடம்பற்றதால் – மகிழ்ச்சி

ipl
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட காத்திருக்கின்றனர். அந்த வகையில் சூதாட்ட பிரச்சனை காரணமாக தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் மீண்டும் ஐபிஎல்லில் விளையாட காத்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய அவர் ஏழு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.

Auction

- Advertisement -

பின்னர் தன் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு மேல்முறையீடு செய்த ஸ்ரீசாந்த் அந்த வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது 38 வயதில் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் இதுவரை 44 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு தன் மீது இருந்த புகாரை வழக்கின் மூலம் வென்ற ஸ்ரீசாந்த் கேரளா அணிக்காக ரஞ்சி போட்டிகளில் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்திற்க்கான பட்டியலில் தனது பெயரை இணைத்த அவர் தற்போது 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவரது குறைந்தபட்ச அடிப்படை விலையாக 50 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sreesanth

இந்நிலையில் அவரது இந்த இடம் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிட்டதாவது : நான் எல்லோரையும் நேசிக்கிறேன். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி நேரத்தில் எனக்காக பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவாய என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsSL : விராட் கோலி விளையாட இருக்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்காக சிறப்பு ஏற்பாடு – பி.சி.சி.ஐ அறிவிப்பு

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக இரண்டு உலகக் கோப்பை வென்ற தொடரில் இடம் பிடித்த அவர் கடந்த 7 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement