INDvsSL : விராட் கோலி விளையாட இருக்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்காக சிறப்பு ஏற்பாடு – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரானது வரும் பிப்ரவரி 25ம் தேதியும், டி20 தொடரானது மார்ச் மாதம் 16 ஆம் தேதி துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரனோ பாதுகாப்பு காரணமாக முதலில் டி20 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த டி20 போட்டிகள் தர்மசாலா, மொஹாலி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் முதலில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா பாதுகாப்பு காரணமாக மொகாலி மற்றும் தர்மசாலா ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடத்த திட்டமிட்டு உள்ளனர். லக்னோவில் டி20 போட்டி நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்ற போன்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராத் கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் இரவு பகல் இரவு ஆட்டமாக நடத்த இருப்பதாக பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kohli 1

மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கும் விராட் கோலி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடயிருக்கிறார். ஏற்கனவே முதன்முறையாக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் முதன் முதலில் விளையாடயிருந்த ஐ.பி.எல் அணி இதுதான் – விராட் கோலியே பகிர்ந்த தகவல்

இதற்கு முன்பு இந்திய அணி இருமுறை பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதில் 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்திலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement