நான் முதன் முதலில் விளையாடயிருந்த ஐ.பி.எல் அணி இதுதான் – விராட் கோலியே பகிர்ந்த தகவல்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்தார். அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய அவர் இதுவரை 207 போட்டிகளில் பங்கேற்று 6283 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் கடந்த 20008-ஆம் ஆண்டு தான் எவ்வாறு பெங்களூர் அணிக்காக தேர்வாகினேன் என்பது குறித்து அவர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இன்றுவரை அந்த அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் மதிப்பில் இந்திய வீரர்களில் உச்சபட்ச சம்பளமான 17 கோடி ரூபாயை வாங்கி வரும் விராட் கோலி இம்முறையும் பெங்களூர் அணிக்காக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தனிப்பட்ட கிரிக்கெட் வளர்ச்சியிலும் ஆர்சிபி அணியின் பங்கு அதிகம் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதலிலேயே அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வந்த அவர் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்கிற காரணத்தினால் கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறினார்.

kohli 3

இந்நிலையில் அவர் முதல் முறையாக பெங்களூர் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட நிகழ்வு குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தான் ஆரம்பத்தில் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனாலும் இறுதி நேரத்தில் நான் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டேன். இல்லையெனில் நான் முதல் முறையாக டெல்லி அணிக்காக ஆடும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியை தொடர்ந்து ஜோங்கோ ஜீப் வாங்கிய சூரியகுமார் யாதவ் – விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

அதோடு எங்கள் அணியின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் வகையில் என்னுடன் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானையும் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. பெங்களூரு அணி என்னை வாங்கியது என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக நான் பார்க்கிறேன் என விராட் கோலி கூறியிருந்தார்.

Advertisement