முடிவுக்கு வந்த ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை. ஐ.பி.எல் ஏலத்தில் லிஸ்ட்ல கூட பெயர் இல்லை – காரணம் இதுதான்

Sreesanth
- Advertisement -

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 18ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்தில் முக்கியமான வீரர்கள் பலர் ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது. இதுவரை ஐபிஎல்லில் இடம்பெறாத இளம் வீரர்கள் பலர் இந்த முறை ஏலம் விடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் மறுபுறம் இதுவரை ஐபிஎல்லில் விளையாடி வந்த பல வீரர்கள் தங்களது வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் கூறி வருகின்றனர்.

auction-1

- Advertisement -

2021 ஐபிஎல் ஏலம் இப்படி பரபரப்பாக தயாராகி வரும் நிலையில் இந்த ஏலத்திற்காக பல வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து இருந்தனர். இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் தொடங்கி ஸ்ரீசாந்த் வரை பலரும் தங்கள் பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர். மொத்தம் 1114 வீரர்கள் இப்படி பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த ஏலத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் அன்மையில் வெளியானது.

மொத்தம் 290 வீரர்கள் இந்த ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 164 வீரர்களும் 123 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். 3 வீரர்கள் எந்த அணியையும் சேராத அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள். இந்த நிலையில் இந்த லிஸ்டில் நேற்று ஸ்ரீசாந்த் பெயர் இடம்பெறவில்லை. தடைக்கு பின் இந்த ஐபிஎல் தொடரில் ஆடிவிட வேண்டும் என்று ஸ்ரீசாந்த் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார் .

இதற்காக அவர் கடுமையாக பயிற்சி செய்து வந்தார். அதோடு சையது முஷ்டாக் கோப்பையிலும் சுமாராக பவுலிங்கும் செய்தார். இதில் சில விக்கெட்டுகளை கூட ஸ்ரீசாந்த் எடுத்தார். மீண்டும் இந்திய அணிக்குள் வருவதே என்னுடைய நோக்கம் என்று ஸ்ரீசாந்த் பல இடங்களில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் கம்பேக் கொடுப்பது மீண்டும் கனவாகவே மாறி உள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

ஆனால் தற்போது இவரின் பெயரே ஏலம் விடப்பட்டுள்ள வீரர்களின் லிஸ்டில் இல்லை. இதனால் இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பது கனவாக மாறி உள்ளது. மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கலாம் என்று நினைத்தவருக்கு இந்த செய்தி முட்டுக்கட்டையாக வந்த சேர்ந்துள்ளது. இவரின் வயது மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் ஆடிய விதம் இதறன வைத்து இவரின் பெயர் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர் சில கிரிக்கெட் வல்லுனர்கள்.

Sreesanth

2013ல் ஐபிஎல் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்திற்கு பிசிசிஐ தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீசாந்த் மீதான தடை காலம் முடிவிற்கு வந்த நிலையில் மீண்டும் முதல்தர போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.இடையில் தடை காலத்தில் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி, சினிமா, பாஜகவில் அரசியல் என்று இவர் பிசியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement