தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்…மைதானத்தில் என்ன காரியம் செய்தார்கள் தெரியுமா? – புகைப்படம் உள்ளே

aus
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகின்றது.அதில் ஏற்கனவே விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ்வென்று பேட்செய்த தென்ஆப்பிரிக்க அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.
africa

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னதாக மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

- Advertisement -

இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது.
smith3

இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வருட தடை விதித்தது.இதன் பின்னர் ஐபிஎல்-இல் விளையாடவும் ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டது.

நான்காவது டெஸ்டில் நேற்று தடைசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பேன்கிராப்ட்,வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு பதிலாக ரென்ஸ், ஜோ பர்ன்ஸ், ஹேன்ட்ஸ் கோம்ப் ஆகியோர் விளையாடினர் .மூன்றாவது டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு பந்தை சேதப்படுத்திய மூவருமே .அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
smith

இருப்பினும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் அவர்களை மன்னித்ததாக தெரியவில்லை.
நேன்றைய டெஸ்ட் போட்டியை காண வந்திருந்த தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் பேன்கிராப்ட் மற்றும் ஸ்மித்திற்கு எதிரான பதாகைகளை கைகளில் பிடித்தபடி தங்களது எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

Advertisement