Worldcup : உலகக்கோப்பை போட்டிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் செட் ஆகாதா ? – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் 15 ஆவது போட்டி நேற்று தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், ஹோல்டர் தலைமை

rsa
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 15 ஆவது போட்டி நேற்று தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.

rsa vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டத்தை தொடர்ந்த தொடக்க வீரர் அம்லா 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் மார்க்கம் 5 ரன்களில் வெளியேற அந்த அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதன் பிறகு மழை பொழிய ஆரம்பித்தது. இதையடுத்து மழை நிற்கும் நிற்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களும், மைதான நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். நிற்காமல் மழை பொழிந்து கொண்டிருந்தது மேலும் மைதானத்தில் நிலைமையும் மிகவும் மோசமாகி போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

rain

எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. உலக கோப்பை தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது இல்லை. மேலும் நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆடி வந்தாலும் உலகக் கோப்பை வரும் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எப்போதும் மோசமாகவே அமைந்துள்ளது. அதனைப் போன்று இந்த தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து. இப்போது இந்து போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஒரு பள்ளி மட்டுமே எடுத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement