பும்ராவை விட அவர் ஃபிட்டாக இருந்தா தான்.. இந்தியா 2026 டி20 உ.கோ ஜெய்க்க வாய்ப்பிருக்கு.. கங்குலி பேட்டி

Sourav Ganguly 2
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.

எனவே இம்முறை சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கத் தயாராகி வருகின்றது. அதற்கு பந்து வீச்சுத் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது முக்கியமாகிறது. ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் பந்து வீசி வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ராவை விட முக்கியம்:

சொல்லப்போனால் 2024 டி20 உலகக்கோப்பையில் அழுத்தமான சமயங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் தொடர்நாயகன் விருதை வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக போற்றப்படுகிறார். எனவே இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வெல்ல அவர் காயமின்றி ஃபிட்டாக முழுமையாக விளையாடுவது அவசியமாகிறது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் டி20 உலகக் கோப்பை வெல்ல ஜஸ்ப்ரித் பும்ராவை காட்டிலும் வருண் சக்கரவர்த்தி ஃபிட்டாக இருப்பது அவசியம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக ஜொலிக்கும் சக்கரவர்த்தி எந்தளவு ஃபிட்டாக விளையாடுகிறாரோ அந்தளவுக்கு இந்தியா கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாக கங்குலி கனித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கங்குலி கருத்து:

“சொந்த மண்ணில் உலகக் கோப்பை விளையாடுவது ஸ்பெஷலானது. அதை விட பெரியது இருக்க முடியாது. இந்தியா எப்போதுமே எனக்கு மிகவும் விருப்பமான அணி. அவர்களிடம் இம்முறை வலுவான ஸ்பின் பவுலிங் அட்டாக் இருக்கிறது. ஒருவேளை வரும் சக்கரவர்த்தி ஃபிட்டாக இருந்தால் அது இந்தியாவின் வெற்றிக்கு நல்லதாக அமையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இன்றைய போட்டியில் இடம் பிடித்ததன் மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி – விவரம் இதோ

அவர் கூறுவது போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் கடைசி நேரத்தில் தேர்வான சக்கரவர்த்தி இந்தியா கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். இம்முறை வருண் சக்கரவர்த்தியுடன் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் சுழல் பந்து வீச்சுத் துறையில் தேர்வாகியுள்ளார்கள். அதனால் சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஸ்பின்னர்களை இந்திய அணி கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement