இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி நேற்று தனது 53-ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் வீரர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது வகுத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் குறித்தும், இந்திய அணியின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
சுப்மன் கில் இனிமேல் தான் அழுத்தத்தை உணர்வார் : சவுரவ் கங்குலி
அந்தவகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் தற்போது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அதில் ஆசிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் எப்போதுமே இந்திய அணியில் இருந்து ஒரு ஜாம்பவான் வீரர் வெளியேறும்போதும் அவர்களது இடத்திற்கு சரியான ஒரு இளம் வீரர் மாற்றுவீரராக நமது அணிக்கு கிடைப்பார்கள்.
அந்த வகையில் தான் தற்போது நமது அணிக்கு சுப்மன் கில் கிடைத்துள்ளார். நமது இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே திறமையான வீரர்கள் இருந்துள்ளனர். ஒவ்வொரு காலத்திலும் நமது அணியில் சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும். அந்தவகையில் தற்போதைய தலைமுறையில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், சிராஜ் போன்றோர் கிடைத்துள்ளனர்.
சுப்மன் கில் திறமையான வீரர் தான். ஆனால் தற்போதே அவருடைய தரத்தை முழுவதுமாக அளவிட முடியாது. அவர் தற்போது மிகச்சிறப்பான பார்மில் பேட்டிங் செய்து வருகிறார். இது அவருடைய சிறந்தகாலம் என்று கூறுவேன். ஏனெனில் தற்போது அவர் புதிய வழியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார். அதில் அவர் வெற்றியும் அடைவார் என்று நம்புகிறேன்.
ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர் கேப்டனாகவும் மாறியுள்ளார். இந்த இங்கிலாந்து தொடரானது அவருக்கு ஒரு தேனிலவு மாதிரி இருக்கும். ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி என்கிற அழுத்தம் என்னவென்று இனிவரும் போட்டிகளிலும், தொடர்களிலும் அவர் உணர்ந்து கொள்வார். இந்த தொடரிலேயே அடுத்த மூன்று போட்டிகளில் அவருக்கு அழுத்தம் தெரியலாம் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்கில் இதுதான்.. அதை பார்த்து வியந்து போயிருக்கேன் – விராட் கோலி கருத்து
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



