இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி நேற்று முன்தினம் தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றி தந்த கேப்டனான அவர் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனி இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்காக விளையாடி வருகிறார்.
தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய திறன் இதுதான் : விராட் கோலி
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த வேளையில் அவருடன் இருக்கும் உறவு குறித்தும், அவரது திறமை குறித்தும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமாகி பின்னர் கேப்டனாக உயர்ந்த விராத் கோலி தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனியிடம் இருக்கும் மிகப்பெரிய திறன்களில் ஒன்று அவருடைய முடிவெடுக்கும் திறமை தான். ஏனெனில் கடினமான வேலைகளிலும் அவர் தனது பொறுமையை இழக்காமல் மிகச்சிறப்பாக முடிவுகளை எடுப்பார். அதன் காரணமாகவே அவரால் சரியான முடிவுகளை அழுத்தமான வேலைகளிலும் எடுக்க முடிவதாக உணர்கிறேன்.
எப்பொழுதுமே அமைதியாகவும் போட்டியில் கவனத்துடன் இருக்கும் அவர் முக்கியமான நேரங்களில் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியாக இருப்பதற்கு அவருடைய நிதானமான அணுகுமுறை தான் காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய முடிவு எடுக்கும் திறனை பார்த்து நான் பலமுறை வியந்து இருக்கிறேன்.
என்னுடைய கேப்டன் என்று நான் தோனியை அழைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எப்பொழுதுமே தோனி என்னுடைய கேப்டன் என்று தான் கூறுவேன் என விராட் கோலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2007 ஆம் ஆண்டு நான் அவரது தலைமையின் கீழ் அறிமுகமான பின்னர் நீண்ட ஆண்டுகள் அவருடன் பயணித்திருக்கிறேன்.
இதையும் படிங்க : லாராவுக்காக வாழ்நாளில் பெரிய தப்பு பண்ணிட்டீங்க.. பத்தோடு 11 போதுமா? வியான் முல்தரை சாடிய கெய்ல்
அதில் பல உலக கோப்பை தொடர்களிலும் நாங்கள் விளையாடி உள்ளோம். அந்த தொடர்களில் எல்லாம் அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி தோனி வீரர்களை பார்த்துக் கொள்வார். அவர் அமைத்து தந்த சூழல் தான் இந்திய அணியை மிகச் சிறப்பாகவும் செயல்பட வைத்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



