இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் விட்டது தவறு : சவுரவ் கங்குலி
அதன்காரணமாக இந்த தொடரில் இங்கிலாந்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பர்மிங்ஹாமில் நேற்று ஜூலை 2-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணியானது தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நீக்கப்பட்டு நிதீஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
அதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் : இந்திய அணி தங்களின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை தான் இந்த போட்டியில் தேர்வு செய்துள்ளதா? என்பது எனக்கு தெரியவில்லை. கடந்த ஆட்டத்தில் பின் வரிசையில் ரன்களை குவிக்காததாலே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது எனது நினைத்து பேட்டிங் ஆழத்தை அதிகப்படுத்தும் வகையில் அணித்தேர்வு அமைந்துள்ளது.
இதையும் படிங்க : 2021இல் கோலி மாதிரி தடுமாறிய கில் 2 செஞ்சுரி அடிக்க இதான் காரணம்.. டெக்னிக் முன்னேற்றம் பற்றி சாஸ்திரி
ஆனால் குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் விட்டது தவறு. ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவரை சேர்த்திருக்க வேண்டும் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.



