2021இல் கோலி மாதிரி தடுமாறிய கில் 2 செஞ்சுரி அடிக்க இதான் காரணம்.. டெக்னிக் முன்னேற்றம் பற்றி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிகள் தோற்றது. அடுத்ததாக பர்மிங்கம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி 2வது போட்டித் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் 310/5 ரன்கள் எடுத்தது.

இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 2, கருண் நாயர் 31, ரிசப் பண்ட் 25, நிதிஷ் ரெட்டி 1 ரன்களில் அவுட்டானார்கள். துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக விளையாடி சதத்தை நழுவ விட்டாலும் 87 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் விளையாடிய கேப்டன் கில் சதத்தை அடித்து அசத்தினார். முன்னதாக 2019ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அசத்தியதில்லை.

- Advertisement -

விராட் கோலி போல:

குறிப்பாக 2021 இங்கிலாந்து தொடரில் மிகவும் மோசமாக விளையாடிய அவர் ஒரு அரை சதத்தை கூட அடிக்கவில்லை. அதனால் பிளேயிங் இருப்பதற்கே தகுதியற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னால் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் கேப்டனாக முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ள கில் விமர்சாகர்களுக்கு பதிலடி கொடுத்து தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் 2014 இங்கிலாந்து தொடரில் திணறிய விராட் கோலி 2018இல் 600க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி அசத்தியதைப் போல சுப்மன் கில் அசத்துவதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதற்காக சுப்மன் கில் செய்த டெக்னிக்கல் மாற்றங்கள் குறித்து அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் தன்னுடைய தடுப்பாட்டத்தில் வேலை செய்தது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:

“கடைசியாக இங்கிலாந்துக்கு வந்த போது விராட் கோலியை போல அவரும் கைகளால் கடினமான பந்தை தள்ளினார். தற்போது அவருடைய மேல் கை அதிகமான கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. அவர் பந்து தன்னுடைய பேட்டுக்கு வந்து அடிப்பதை அனுமதிக்கிறார். அவர் தன்னுடைய தடுப்பாட்டத்தை நம்புகிறார். அவர் தனது புத்தகத்தில் அனைத்து ஷாட்டுகளையும் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்”

இதையும் படிங்க: டிஎன்பிஎல்: 83 ரன்ஸ்.. எலிமினேட்டரில் ஆல் ரவுண்டராக அஸ்வின் மிரட்டல்.. திருச்சியை வெளியேற்றிய திண்டுக்கல்

“பந்தை அழகாக டிரைவ் செய்யக்கூடிய அவரால் நன்றாக ஃபுல் செய்ய முடியும். தன்னுடைய தடுப்பாட்டத்தில் கொஞ்சம் வேலை செய்ததே தற்போது அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாற்றத் துவங்கியுள்ளது” என்று கூறினார். இங்கே பர்மிங்கம் மைதானத்தில் விராட் கோலிக்கு (2018) பின் சதத்தை அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement