இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த மே 12-ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 36 வயதே ஆன விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்துள்ளார். இன்னும் 10,000 ரன்களை எட்ட வெறும் 770 ரன்களே தேவை என்ற நிலையிருந்தது.
விராட் கோலி எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது : சவுரவ் கங்குலி
அதோடு இன்னும் ஓராண்டு அவர் விளையாடியிருந்தால் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை குவித்த இந்திய வீரராக சாதனை நிகழ்த்திருக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அவர் முன்கூட்டியே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இருப்பினும் விராட் கோலியின் இந்த முடிவை ஏற்றுக் கொண்ட அனைவரும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்தும், அவரது இந்த ஓய்வு முடிவு குறித்தும் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு வீரரின் ஓய்வு என்பது அவர்களது தனிப்பட்ட முடிவு. அந்த வகையில் தான் விராட் கோலியும் தனது தனிப்பட்ட முடிவாக இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஒரு அற்புதமான வீரர் அவரது இந்த கரியர் மிகவும் சிறப்பான ஒரு கரியர். அதேபோன்று ரோகித் சர்மாவும் மிகச் சிறப்பான வீரர் தான். அவரது கரியரும் மிகச் சிறப்பாக முடிவுக்கு வந்துள்ளது.
என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் கோலியின் ஓய்வு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். இப்படி உச்சகட்டமான பார்மில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது எனக்கு சர்ப்ரைஸ்ஸாக இருந்தது என கங்குலி தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : 34/3 டூ 219/5.. மிடில் ஆர்டரில் ராஜஸ்தானை நொறுக்கிய பஞ்சாப்.. மும்பையை முந்தி 2 வரலாற்று சாதனை
தற்போது 36 வயதாகும் விராட் கோலி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முழுவதும் விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருந்தாலும் அணியின் நிர்வாகத்திடம் கேப்டன்சி வாய்ப்பை கேட்டு அவர்கள் அதை மறுத்ததாகலே திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.



