இந்தியா பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது இவர்கள் கையில் தான் உள்ளது – சவுரவ் கங்குலி ஓபன்டாக்

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாக காணப்படும். இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிதான் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த போட்டிகள் ஆக இருந்து வருகின்றன. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் பிரச்சினைகள் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இரு தரப்பு தொடர் நடைபெறாமல் உள்ளது.

Shaheen-afridi

- Advertisement -

கடைசியாக 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதில் டி20 தொடரினை சமநிலை செய்த பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரினை கைப்பற்றி இருந்தது. அதன் பின்னர் இரு நாட்டு அரசியல் பிரச்சினை காரணமாக எந்த ஒரு போட்டியிலும் நேரடியாக பங்கேற்காமல் இருந்து வந்தது.

இருப்பினும் ஐசிசி நடக்கும் தொடர்களில் இரு அணிகளும் மோதின. இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும்போது ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து இரு நாட்டு அணிகளுக்கும் இடையே இரு தரப்பு தொடர் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பேசிய பிசிசிஐயின் தலைவர் கங்குலி கூறுகையில் :

varun

இரு நாட்டு அணிகளும் விளையாடுவது கிரிக்கெட் வாரியம் கையில் இல்லை. உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. பிசிசிஐ சார்பாக நானும், பாகிஸ்தான் நிர்வாகம் சார்பாக ரமேஷ் ராஜாவும் நாங்கள் இருவருமே எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டுமெனில் அதை இரு நாடுகளின் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பை தொடர் முழுவதுமே திரும்ப திரும்ப நடைபெற்ற ஒரே சம்பவம் – கவாஸ்கர் கண்டனம்

இது குறித்து பேசிய ஐசிசி நிர்வாகி கூறுகையில் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறாமல் இருப்பதற்கு அரசியல் சூழ்நிலை தான் காரணம் ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையே இரு தரப்பு தொடர் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement