வீரர்களிடையே கொரோனா பரவியது எப்படி ? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த – சவுரவ் கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் சீசன் வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையறையின்றி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பி.சி.சி.ஐ மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

IPL

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த விமர்சனங்களை எல்லாம் தள்ளி வைத்து அயல் நாட்டு வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என வீரர்கள் அனைவரையும் பத்திரமாக வீடு வழியனுப்பும் பணிகளை பிசிசிஐ தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பிரிட்டன் சென்று குவாரன்டைன் செய்துள்ளனர். அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்களும் மாலத்தீவு சென்று அங்கிருந்து நாடு திரும்புவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவரவர் சொந்த வீடுகளுக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கடுமையான பயோ பபுள் விதிமுறைகளையும் மீறி வீரர்கள் இடையே கொரோனா தொற்று ஏற்பட கொல்கத்தா அணியின் வீரரான வருன் சக்ரவர்த்தி விதிகளை மீறியதே காரணம் என்று விமர்சனங்களும் கடுமையாக எழுந்தன. இந்நிலையில் தற்போது வீரர்களிடையே இடையே பரவிய இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய கங்குலி கூறுகையில் : எனக்கு தெரிந்தவரை விதிமுறைகள் மீறப்பட்டதாக நான் கருதவில்லை. ஏனெனில் பிசிசிஐக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி எந்த ஒரு வீரரும் விதிமுறையை தாண்டவில்லை.

sandeep

நாட்டில் பெருகிவரும் கொரோனவைரஸ் அதிகரித்தது எப்படி எனக் கூறுவது கடினம் அதேபோலத்தான் ஐபிஎல் தொடரிலும் நோய் தொற்று எவ்வாறு பரவியது எப்படி என்று கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினமான ஒன்று. ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் தொற்று அதிகம் இருந்த மும்பை நகரில் கூட வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அந்த போட்டிகளில் கூட ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஒரே நகரத்தில் போட்டியை நடத்தி இருக்கலாம் என்று இப்போது கூறுவது சுலபம். ஆனால் நாங்கள் போட்டி அட்டவணையை திட்டமிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது .

Cummins

அது மட்டுமின்றி இங்கிலாந்து தொடரையும் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் இந்த தொடரை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று நினைத்தோம். ஆனால் திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிஷ்டவசமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தற்போது நலமுடன் உள்ளனர் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement