இந்த காரணத்தால் நியூஸிலாந்து தோல்வி பிரச்சனையில்ல.. கோலி ஆஸியில் அசத்துவாரா.. கங்குலி பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. எனவே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது. போதாகுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்போது சுமாரான ஃபார்மில் இருப்பதும் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் இந்திய அணி கவலைப்பட வேண்டியதில்லை என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கங்குலி ஆதரவு:

ஏனெனில் அந்தத் தொடரில் இருந்த சுழலுக்கு சாதகமான மைதானங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்காது என்று கங்குலி கூறியுள்ளார். மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்த கடைசி தொடரில் அசத்துவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக விராட் கோலி சாம்பியன் பேட்ஸ்மேன். அவர் ஆஸ்திரேலியாவில் கடந்த காலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்”

“2014 தொடரில் 4 சதங்கள் அடித்த அவர் 2018இல் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் அடித்தார். எனவே இந்த தொடரையும் அவர் தன்னுடைய எண்ணிக்கையில் வைக்க விரும்புவார். இது கடைசியாக ஆஸ்திரேலியாவில் நாம் விளையாடும் தொடர் என்பதும் அவருக்கு தெரியும். எனவே அனைத்து வகைகளிலும் இது விராட் கோலிக்கு பெரிய தொடர்”

- Advertisement -

விராட் கோலி அசத்துவார்:

“நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நான் அதிகமாக படிக்க விரும்பவில்லை. ஏனெனில் அத்தொடரில் இருந்த ஆடுகளங்கள் நம்மை சிறப்பாக பேட்டிங் செய்ய விடவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சூழ்நிலைகளில் விராட் கோலி மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்வார். அங்கே நல்ல ஆடுகளங்கள் இருக்கும். எனவே ஆஸ்திரேலியா தொடரில் அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று நான் ஆதரவு கொடுக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்த அந்த அணி முனைப்பு காட்டும் – சுனில் கவாஸ்கர் கணிப்பு

அவர் கூறுவது போல ஆஸ்திரேலியாவில் வேகத்துக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும். எனவே அங்கே விராட் கோலி தம்முடைய கடந்த கால அனுபவங்களை வைத்து அசத்துவார் என்று நம்பலாம். அதே போல ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுவார் என்று நம்பலாம்.

Advertisement