- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சனை கழட்டி விடாதீங்க.. காரணத்துடன் ஆதரவாக பேசிய சவுரவ் கங்குலி – விவரம் இதோ

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக இருந்த சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரது பேட்டிங் பார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. அதேவேளையில் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை தாண்டி இஷான் கிஷனுக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

சஞ்சு சாம்சனை ஆதரித்த சவுரவ் கங்குலி :

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் வெளியே அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது அபிஷேக் சர்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது. அதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இந்த வாய்ப்பை அவர் கட்சிதமாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 22 ரன்கள் மட்டுமே அடித்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார். அதனால் சஞ்சு சாம்சனை இந்திய அணி கழட்டி விட வேண்டும் என அனைவரும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வளவு எளிதாக சஞ்சு சாம்சனை இந்திய அணி விட்டு விடக்கூடாது என்றும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்றால் நிச்சயம் சஞ்சு சாம்சனை தான் விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் அதுதான் அணியின் சமநிலைக்கு சரியாக இருக்கும். சஞ்சு சாம்சனை பொருத்தவரை பேட்டிங் ஃபார்ம் இல்லை என்று நிறைய பேர் சொல்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்களே ஆசைப்படுறாங்க.. அப்புறம் என்ன.. அபிஷேக் சர்மா குறித்து கேள்விக்கு – சூரியகுமார் யாதவ் பதில்

ஆனால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் போது அவரைப் போன்ற திறமை மிக்க வீரர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். உண்மையிலேயே சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான வீரர். அவருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களின்றி வாய்ப்புகள் கிடைக்கும்போது நிச்சயம் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும் என சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -