அவங்களே ஆசைப்படுறாங்க.. அப்புறம் என்ன.. அபிஷேக் சர்மா குறித்து கேள்விக்கு – சூரியகுமார் யாதவ் பதில்

SKY and Abhishek
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கடந்த ஓராண்டாகவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடி வருவதால் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால் அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது லீக் போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

பாகிஸ்தான் விரும்பினால் அது நடக்கும் : சூரியகுமார் யாதவ்

அதனை தொடர்ந்து நமீபியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக அவர் தவறவிட்டார். அதன் காரணமாக அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அந்த போட்டிகள் துவக்க வீரராக விளையாடியிருந்தார். ஆனால் அவரால் பெரிய ரன் குவிப்பினை வழங்க முடியவில்லை.

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவுக்கு இப்படி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது அவரது இடத்திற்கு பெரிய கேள்வியை எழுப்பியது. ஆனால் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள அபிஷேக் ஷர்மா மீண்டும் பேட்டிங் பயிற்சி துவங்கி விட்டதால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறயிருக்கும் வேளையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் : அபிஷேக் ஷர்மா இந்திய அணியுடன் இணைந்து விளையாட நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராகவே நாங்கள் விளையாட ஆசைப்படுகிறோம். எனவே அபிஷேக் ஷர்மா எங்களது அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டனின் இந்த கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : அபிஷேக் சர்மா நாளை ஆட்டத்தில் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால் நிச்சயம் அவர் அந்த அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என சுவாரசியமான பதிலை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement