எங்க இந்திய ப்ளேயர் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லாதீங்க, சோயப் அக்தருக்கு – சௌரவ் கங்குலி கொடுத்த பதிலடி என்ன

Sourav Ganguly Shoaib Akhtar
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தம்முடைய 15 வருட பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக சச்சின் விடைபெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 75 சதங்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக ஜொலித்து வருகிறார்.

Virat Kohli

- Advertisement -

அதே போல கேப்டனாக உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் 2016 – 2021 வரை வரை இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்கள் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த அவர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். மேலும் இந்த உலகிற்கே ஃபிட்னஸ் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் அவர் காட்டுத்தனமாக அடிக்காமலேயே ஃபீல்டர்கள் நிற்கும் இடைவெளிகளை பார்த்து தரையோடு தரையாக அடிக்கும் கிளாஸ் பேட்டிங் வெளிப்படுத்தி ரசல், பொல்லார்ட் போன்றவர்களை காட்டிலும் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து வருகிறார்.

கங்குலி பதிலடி:
அப்படி 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தம்முடைய வாழ்க்கை தெரிவித்தார். குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடவுளின் ஆசிர்வாதத்துடன் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததற்காக சந்தித்த விமர்சனங்களை தூளாக்கி தம்மை சாம்பியன் வீரர் என்று நிரூபித்ததாக அவர் பாராட்டினார்.

அதை விட தற்போது 34 வயதை கடந்துள்ள விராட் கோலி 75 சதங்கள் அடித்துள்ள நிலையில் 2023 உலகக்கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை உடைத்து சரித்திரம் படைப்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் விராட் கோலி ஏன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற வேண்டுமென அவருடைய கருத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு தம்மை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியுடன் அசத்தும் விராட் கோலி தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடலாம் என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “ஏன்? விராட் கோலி தாம் விளையாட விரும்பும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்” என்று கூறினார்.

Ganguly 1

முன்னதாக கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலி இழந்ததற்கு கங்குலி தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் இப்படி பேசியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைகிறது. அது போக உலகக்கோப்பையில் 4வது இடத்தைப் பற்றி குழம்பாமல் இருக்கும் வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்து வெற்றி காணுமாறு இந்திய அணிக்கு அவர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு.

இதையும் படிங்க:தோனி அல்லது யுவி மாதிரி அவர் அடுத்த ஃபினிஷராக வருவாரு – இளம் இந்திய வீரர் மீது கிரண் மோர் நம்பிக்கை

“வலது அல்லது இடது கை பேட்ஸ்மேன்கள் என பார்க்காமல் உங்களுடைய சிறந்த வீரர்களை தேர்ந்தெடுங்கள். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிசான் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவருடன் ரோகித், விராட், ஜடேஜா, அக்சர் படேல், பாண்டியா போன்றவர்களால் இந்தியா சிறந்த அணியாகவே இருக்கிறது. இருப்பினும் வென்றால் இந்தியா சிறந்த அணியாகவும் தோற்றால் மோசமான அணியாகவும் விமர்சிக்கப்படுவது வழக்கமாகும். விளையாட்டில் ஒரு அங்கமான அதை நீங்கள் கடந்து விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement