தோனி அல்லது யுவி மாதிரி அவர் அடுத்த ஃபினிஷராக வருவாரு – இளம் இந்திய வீரர் மீது கிரண் மோர் நம்பிக்கை

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக காயத்திலிருந்து குணமடைந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rinku Singh Prasid Krishna

- Advertisement -

அவரது தலைமையில் விளையாடும் இத்தொடரில் முதல் போட்டியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். அதில் கடுமையாக உழைத்து போராடி வந்த ரிங்கு சிங் அறிமுகமாக வாய்ப்பு பெற்றது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர் சிலிண்டர் விற்பவரின் மகனாக சாதாரண குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்தார்.

தோனி, யுவி மாதிரி:
அப்படியே காலங்கள் சென்ற நிலையில் கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த அவர் இந்த வருடம் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 416 ரன்களை 145.45 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். அதிலும் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து பாராட்டுகளை அள்ளினார்.

Rinku-Singh

அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் கண்டுகொள்ளப்படாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக தற்போதைய மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமாக இருக்கும் பிரச்சனையை போக்கி அவரது 2024 டி20 உலக கோப்பையில் ஃபினிஷராக செயல்படும் அளவுக்கு இப்போதே வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

அதனால் தற்போது இந்த தொடரில் தேர்வாகியுள்ள அவர் மழையால் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை என்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் சவாலான லோயர் மிடில் ஆர்டரில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் இந்தியாவுக்காக அந்த இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு ஃபினிஷர்களாக அசத்திய ஜாம்பவான்கள் எம்எஸ் தோனி, யுவராஜ் சிங் போல் வருவார் என முன்னாள் வீரர் கிரண் மோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்ருமாறு. “இந்திய அணியில் அவருடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். குறிப்பாக 5, 6 ஆகிய பேட்டிங் இடங்களில் அவரால் சிறப்பாக செயல்பட்டு தம்முடைய கேரியரின் முடிவில் சிறந்த ஃபினிஷராக உருவெடுக்க முடியும். அந்த இடங்களில் யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் வெற்றிகரமாக செயல்பட்டதை நாம் பார்த்தோம். ஆனால் அதன் பின் நமக்கு அவர்களைப் போன்ற வீரர்கள் இது வரை கிடைக்கவில்லை”

- Advertisement -

“அவர்களைப் போன்ற வீரர்களை உருவாக்க முயற்சித்தும் நமக்கு வெற்றியும் கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அந்த இடத்தில் அசத்துவதற்கு திலக் வர்மாவும் வந்துள்ளார். மேலும் ரிங்கு சிங் சிறந்த ஃபீல்டராகவும் செயல்படும் திறமையை கொண்டவர். நீண்ட காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் பார்த்து வரும் எனக்கு அவர் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தோன்றுகிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:2023 உ.கோ : விராட்டை விட பாபர் தான் கன்சிஸ்டன்ட் பேட்ஸ்மேன், இந்தியாவின் தோல்வி நிச்சயம் – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தோனி, டேவிட் மில்லர் சாதனைகளை உடைத்த ரிங்கு சிங் புதிய சாதனைகளை படைத்து அழுத்தமான நேரங்களில் அபாரமாக செயல்பட்டார். எனவே வருங்காலங்களில் இந்தியாவின் ஃபினிஷராக அவர் உருவெடுப்பார் என்று நம்பலாம்.

Advertisement