2023 உ.கோ : விராட்டை விட பாபர் தான் கன்சிஸ்டன்ட் பேட்ஸ்மேன், இந்தியாவின் தோல்வி நிச்சயம் – முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

Virat Kohli and Babar Azam
- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 2023 ஆசியக் கோப்பை வரும் செப்டம்பர் 30 முதல் பாகிஸ்தானிலும் உலக கிரிக்கெட்டின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவிலும் துவங்குகிறது. இந்த 2 தொடர்களில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு அனைவரிடமும் உச்சகட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உலகக்கோப்பையில் காலம் காலமாக தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறை பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருக்கிறது.

IND-vs-PAK

- Advertisement -

அதற்கு முன்னோட்டமாக வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்று வாகை சூடுமா என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம் 30 வருடங்களாக தோற்று வருவதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்த அனைத்து தோல்விகளுக்கும் இம்முறை இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

பாகிஸ்தான் வெல்லும்:
இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது, புதிய வீரர்களை சோதிப்பது, முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளது போன்ற அம்சங்களால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் தோற்கடிக்கும் என அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ஆகிப் ஜாவேத் நட்சத்திர வீரர்களை கொண்டிருப்பதே முக்கிய தருணங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் இந்தியா தோற்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Babar-Azam-and-Virat-Kohli

மேலும் இரு நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரங்களில் விராட் கோலியை விட பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேனாக இருப்பதால் இம்முறை 2023 உலக கோப்பையில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பல நேரங்களில் சில நட்சத்திர வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையும் கேரியரின் கடைசி சில வருடங்களாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் வருவீர்கள். இம்முறை அது இந்தியாவுக்கு நடக்கிறது என்று உணர்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக நட்சத்திர வீரர்கள் அணியை விட பெரியவர்களாக உருவெடுக்கும் போது முக்கிய தருணங்களில் அணி நிர்வாகத்துக்கு சரியான முடிவை எடுப்பதில் கடினம் ஏற்படுகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தானுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவால் எவ்வளவு நாட்கள் விளையாடி விட முடியும்? அதே போல விராட் கோலி பற்றிய கருத்துக்கள் என்ன? ஒருவேளை நீங்கள் விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்டால் ஒரு சீசனில் அபாரமாக செயல்படும் அவர் மற்றொரு சீசனில் திண்டாடுகிறார்”

Aakib Javed

“அதாவது விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார். அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை. அதனால் தான் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்கிறேன்” எனக் கூறினார். இருப்பினும் நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் அனுபவத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை விட ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களுடன் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணியாகவே இருக்கிறது.

இதையும் படிங்க:IND vs IRE : என்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு அவர்களே காரணம் – இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டி

அதே போல 2017இல் அறிமுகமான பாபர் அசாம் வெறும் 4 – 5 வருடங்கள் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 2008இல் அறிமுகமான விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சுமார் 50 என்ற பேட்டிங் சராசரியுடன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் சச்சின் முதல் லாரா வரை வரலாற்றில் ஃபார்மை இழக்காத வீரர்களே இல்லை என்ற நிலைமையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் இந்த கதையை நிறுத்தியுள்ள விராட் கோலி தற்போது முழுமையான ஃபார்முக்கு திரும்பி 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement