ஷ்ரேயாஸ் ஐயரை இப்படி பார்க்க ஏமாற்றமாக இருக்கிறது.. வருத்தத்தை தெரிவித்த – சவுரவ் கங்குலி

Ganguly and Shreyas
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டும் அதில் திறமையான மற்றும் தகுதியான சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாதது வருத்தம் அளிக்கிறது : சவுரவ் கங்குலி

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்காது பலருது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் தகுதியான ஒரு நபர் என்ற ஆதரவும் அவருக்கு குவிந்திருந்தது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போதும் சரி மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது குறித்து தங்களது விமர்சனத்தை வெளிப்படையாகவே முன் வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி ஆசிய கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்திருக்க வேண்டும்.

- Advertisement -

அவர் இல்லாமல் இந்திய அணியை நான் இந்த ஆசிய கோப்பை தொடரில் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி உள்ளார். மேலும் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று தந்த அவர் இந்த ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : ரிங்கு சிங் பக்கா பினிஷராக இருந்தும் பிளேயிங் லெவனில் ஷிவம் துபே இடம்பிடிக்க இதுதான் காரணம் – விவரம் இதோ

இப்படி சிறப்பாக அவர் தனது பங்களிப்பை அனைத்து இடங்களிலும் வழங்கியுள்ள வேளையில் அவர் இல்லாமல் இந்திய அணி விளையாடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மாவை விட அவர் ஒரு படி மேலானவர் என்று நினைக்கிறேன் என்று சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement