சி.எஸ்.கே அணியில் 13 பேருக்கு கொரோனா. என்ன சொல்கிறார் பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி – விவரம் இதோ

Ganguly

பல்வேறு சிக்கல்களை கடந்து இந்தியாவில் நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் 53 நாட்கள் 60 போட்டிகள் என மொத்தமாக துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே சென்றடைந்தன.

Dubai

மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது வீரர்கள் பயிற்சியையும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த தொடரில் சி.எஸ்.கே அணி இடம் பெறுவது குறித்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது உள்ள சூழலில் சென்னை வீரர்கள் இன்னும் ஒரு வாரம் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். சி.எஸ்.கே அணியால் பயிற்சியை மேற்கொள்ள சில நாட்கள் முடியாமல் போனாலும் மீதம் இருக்கும் நாட்களில் பயிற்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சூழ்நிலை ஐபிஎல் போட்டிகளில் சிக்கலை ஏற்படுத்துமா என்பது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதுகுறித்து அவர் கூறுகையில் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது. போட்டி அட்டவணை படி ஐபிஎல் தொடர் நிச்சயம் தொடங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மிக நீண்ட தொடர் என்பதால் எல்லாம் சிறப்பாக செயல்படும் என்பதை உண்மையாக நம்புகிறேன். ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

Dream-11-1

ஆனால் தற்போது வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால் நிலவரத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமான அட்டவணைப்படி எனது வேலையை துவங்கி உள்ளேன். கட்டாயம் பாதுகாப்புடன் நம்முடைய வேலையை செய்ய வேண்டிய நேரமிது. ஐபிஎல் தொடர் நடைபெற்று சிறப்பாக முடியும் என்று கங்குலி உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.