இது பாகிஸ்தான் இல்ல.. இந்தக் காரணத்தால் தெ.ஆ தொடரில் இந்திய அணி ஜெய்க்கும்.. கங்குலி பேட்டி

Sourav Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் நவம்பர் 14ஆம் தேதி துவங்குகிறது. கடந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத அவமானத் தோல்வியைச் சந்தித்தது.

அதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வு பெற்றார்கள். அதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்தில் 2 – 2 என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்து அசத்தியது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது.

- Advertisement -

இது பாகிஸ்தான் கிடையாது:

அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாபிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸை விட வலுவான அணியாகும். அந்த அணியில் தெம்பா பவுமா தலைமையில் மார்க்ரம், ரபாடா போன்ற உலகத்தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர்.

அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது. எனவே இந்தியாவை மண்ணில் தோற்கடிக்கும் பலம் தென்னாப்பிரிக்காவிடம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியால் பாகிஸ்தானில் அசத்த முடியும் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

ஆனால் நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களை கொண்ட இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினம் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா வெல்லும். ஏனெனில் இந்தியாவின் ஸ்பின் அட்டாக் நன்றாக இருக்கிறது. 3 மாதங்களுக்கு முன் இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று அற்புதமாக விளையாடியது”

இதையும் படிங்க: நெருப்புடன் நெருப்பு வேணும்ன்னா தெ.ஆ டி20யில்.. கில்லை கழற்றி விட்டு அவரை விளையாட வைங்க.. அஸ்வின் பேட்டி

“அத்தொடர் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. அத்தொடரில் கில், ஜெய்ஸ்வால், ராகுல், பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா உட்பட இந்திய அணி முழுக்க திறமை இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் நன்றாக விளையாடினார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்திய அணி இந்தியாவில் வித்தியாசமான மீனாக இருக்கும். எனவே இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்க தென்னாபிரிக்கா மிகவும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement