- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதை மட்டும் பொறுத்துக்கவே முடியாது.. பாகிஸ்தானுடன் இனி எப்போதுமே கிரிக்கெட் வேணாம் – குங்குலி கருத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுமூகமற்ற எல்லை பிரச்சினை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு தொடரில் விளையாடுவது கிடையாது. அதோடு பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஐசிசி போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லக்கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது.

பாகிஸ்தான் அணியுடன் இனி கிரிக்கெட்டே வேண்டாம் : சவுரவ் கங்குலி

அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான அணி இந்தியா வந்து விளையாடியிருந்த போதிலும் இந்திய அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அங்கு செல்லாமல் துபாயில் தங்களது அனைத்து போட்டிகளையும் விளையாடி இருந்தது.

- Advertisement -

மேலும் எப்போதும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த முடிவை தீவிரப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பஹல்ஹாம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதால் இனி எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு தொடர் நடைபெறாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மேலும் பாகிஸ்தான் உடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்திய அணி முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி :

- Advertisement -

பாகிஸ்தான் அணியுடனான அனைத்து வகையான கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 100% பாகிஸ்தானுடன் அனைத்து வகையான உறவுகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா பார்முக்கு வந்தா இதான் நடக்கும்.. மும்பை இந்தியன்ஸ் இஸ் பேக் – பொல்லாக் பேட்டி

ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நடப்பது நகைச்சுவையான ஒரு விடயம் அல்ல. பயங்கரவாதத்தை எப்போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே இந்திய அணி இனி எந்த காரணத்திற்காகவும் பாகிஸ்தான் அணிக்கு இடம் கொடுக்கக் கூடாது என சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -