இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் 6 ஆட்டங்களில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து மீண்டும் மிகச்சிறப்பான பார்முக்கு திரும்பியுள்ளார். குறிப்பாக முதல் ஆறு போட்டிகளில் முறையே 0,8,13,17,18,26 ரன்களை அடித்து ஆட்டமிழந்த அவர் வெறும் 82 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.
ரோஹித் சர்மா பார்முக்கு வந்தா இதான் நடக்கும் : ஷான் பொல்லாக்
அதன் காரணமாக ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்து வந்தன. அதேவேளையில் அவருக்கான ஆதரவும் ஒரு சிலர் மத்தியில் இருந்து வந்தது. இப்படி கடினமான சூழ்நிலைக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த ரோகித் சர்மா அதன்பிறகு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
இப்படி அடுத்தடுத்த அவரது இந்த இரண்டு அரைசதங்கள் மும்பை அணியின் வெற்றிக்கு உதவியதோடு சேர்த்து புள்ளி பட்டியலிலும் அந்த அணியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு வந்துள்ளது குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் கூறுகையில் : ரோகித் சர்மா போன்ற ஒரு பிளேயர் டாப் ஆர்டரில் பார்முக்கு வரும்போது அது அந்த அணிக்கு மிகப்பெரிய வலிமையை ஏற்படுத்தும்.
ஏனெனில் ரோகித் சர்மா போன்ற அதிரடியான துவக்க ஆட்டக்காரர் துவக்க ஓவர்களில் ரன் குவிப்பை அதிகப்படுத்தி விட்டால் பின்னர் மும்பை அணியின் பேட்டிங் வரிசைக்கு எப்பேர்பட்ட இலக்கையும் சேசிங் செய்யும் பலம் கிடைக்கும். அதுமட்டுமின்றி முதலில் பேட்டிங் செய்யும்போது அவர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளிக்கும் பட்சத்தில் பெரிய ரன் குவிப்பை நோக்கியும் அவர்களால் செல்ல முடியும்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஜோக் பண்றாங்களா? இனிமேலும் இந்தியா பொறுத்துக்காம இதை செய்யனும்.. கங்குலி விளாசல்
அதன்காரணமாக ரோகித் சர்மாவின் பார்ம் அந்த அணிக்கு மிக முக்கியமான ஒன்று தற்போது ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு வந்துள்ளதால் எந்த எதிரணியையும் வீழ்த்தும் பலம் மும்பை அணிக்கு மீண்டும் வந்துள்ளது. இது மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒரு விடயம் தான் என ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து பொல்லாக் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



