சி.எஸ்.கே பத்தி என்கிட்ட எதும் கேக்காதீங்க. நான் பதில் சொல்ல மாட்டேன் – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி அதிரடி

Ganguly
- Advertisement -

நடப்பு ஆண்டின் 13 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சி.எஸ்.கே அணியில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டன.

ipl

அனைத்து அணிகளும் ஒரு வார குவாரன்டைன் நேரத்திற்கு பிறகு தற்போது பயிற்சியை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏனெனில் சென்னை அணியில் இரண்டு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அது மட்டுமின்றி முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்றும் தெரிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பதான்கோட்டில் மர்ம நபர்களால் தனது அத்தை வீட்டிற்கு ஏற்பட்ட பிரச்சனையில் அவரது மாமா இறந்ததாலும் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது.

Raina

ஆனால் இறுதியில் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பே அவர் இத் தொடரில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணம் என்று அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அது குறித்தும் சிஎஸ்கே அணியின் நிலைமை குறித்தும் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது.

- Advertisement -

அப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு கங்குலி கூறியதாவது : “இப்போதுள்ள சிஎஸ்கே அணியின் நிலை குறித்து என்னால் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது”. இது போன்ற கேள்வியை கேட்க வேண்டாம் என “டைம்ஸ் ஆப் இந்தியா”விற்கு கங்குலி பதிலளித்துள்ளார். மேலும் தற்போது எங்களுடைய நோக்கம் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே என்று கங்குலி கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதால் இத்தொடர் சிறப்பாக நடைபெறும் என தாம் உறுதியாக நம்புவதாகவும், திட்டமிட்டபடி சரியான நேரத்திற்குள் சிஎஸ்கே அணி விளையாட தயாராகிவிடும் என தான் நினைப்பதாகவும் கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement