ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 19வது போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்தை அதனுடைய சொந்த மண்ணில் அடித்து நொறுக்க முடியாமல் சிறப்பாக பௌலிங் செய்த குஜராத் 152/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 31 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத் அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய குஜராத் மிகவும் நேர்த்தியான பேட்டிங் செய்து 16.4 ஓவரிலேயே 153-3 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கில் 61*, வாஷிங்டன் சுந்தர் 49, ரூதர்போர்ட் 35* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
கங்குலி பாராட்டு:
அதன் காரணமாக ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தும் 4வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் 4 மூன்றாவது வெற்றியைப் பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் குஜராத் அணியின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அணுகுமுறை சிறப்பாக இருப்பதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.
குறிப்பாக தலைமைப் பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா கிரிக்கெட்டைப் பற்றிய நல்ல மூளையைக் கொண்ட தரமானவர் என்றும் கங்குலி பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் தங்களது முதல் சீசனில் இருந்தே குஜராத் செயல்படும் விதத்தை விரும்புகிறேன். அவர்களின் அணி அமைப்பிலும் அணுகு முறையிலும் கிரிக்கெட்டை பற்றிய நிறைய மூளை இருக்கிறது”
அசத்தும் நெஹ்ரா:
“ஆசிஷ் நெஹ்ரா உண்மையிலேயே தலைமைப் பயிற்சியாளராக தனது குணங்களை அபாரமான விளையாட்டு உணர்வோடு வெளிப்படுத்தி வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வருடத்திலேயே நெஹ்ராவின் வழிகாட்டுதலில் பாண்டியா தலைமையில் குஜராத் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: நியாயப்படி பாத்தா தோனி 35 வயசுலயே அந்த முடிவை எடுத்திருக்கனும்.. எடுக்காம விட்டது தப்பு – ரஷீத் லத்தீப் விமர்சனம்
அதன் வாயிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமைப் பயிற்சியாளர் என்ற சாதனையை நெஹ்ரா படைத்தார். அதற்கடுத்த வருடம் ஃபைனல் வரை சென்ற குஜராத் கடந்த வருடம் பாண்டியா இல்லாமல் கில் தலைமையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் இம்முறை மீண்டும் நெஹ்ரா – கில் தலைமையில் குஜராத் வெற்றி நடை போடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



