ஐ.பி.எல் தொடரை சுவாரசியப்படுத்த கங்குலி வைத்திருக்கும் புதிய திட்டம் – விவரம் இதோ

Ganguly

இந்த வருட ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பிசிசிஐ படு சுறுசுறுப்பாக உழைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. அனைத்து அணிகளையும் துபாய் கொண்டு வந்து சேர்த்து ஆகிவிட்டது. தற்போது அட்டவணையை தயார் செய்து விரைவில் அதனை இன்றோ அல்லது நாளையோ வெளியிட இருக்கிறது.

ipl

அனைத்து வீரர்களையும் உயர்பாதுகாப்பு வளையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் போட்டிகளை நடத்துவது தான் மீதி வேலை. இதற்காக கங்குலி கடுமையாக உழைத்து வருகிறார். இந்த வருடம் பல நூறு கோடி ரூபாய் பிசிசிஐக்கு நட்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பல ஸ்பான்சர்கள் வெளியேறிவிட்டார்கள். இருப்பினும் அதையெல்லாம் சரிக்கட்டி தற்போது ஐ.பி.எல் ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களும் இந்த போட்டியை உட்கார்ந்து பார்க்க முடியாது. இதன் காரணமாக தொலைக்காட்சியிலும் ஆன்லைன் தளங்களிலும் தான் போட்டிகள் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இதன் காரணமாக இந்த முறை அதிக மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என்று சௌரவ் கங்குலி சமீபத்தில் கூறியிருந்தார்.

IPL

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரை 30 சதவீத ரசிகர்களை வைத்து நடத்தலாம் என்பது போல் சௌரவ் கங்குலி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்… வைரஸ் தொற்று இருந்தாலும் மக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக தொட்டு பழகிக் கொண்டு தான் இருக்கின்றனர். வெகு சீக்கிரத்தில் சமூக இடைவெளியுடன் கூடிய மைதானத்தை பார்க்கலாம்.

- Advertisement -

Dubai

இதில் 30 சதவீத ரசிகர்களை வைத்து போட்டியை நடத்தலாம் என்று கூறியிருக்கிறார் சௌரவ் கங்குலி. எப்படியாவது ரசிகர்களை உள்ளே வர வைத்து மீண்டும் கிரிக்கெட்டை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் பிசிசிஐயின் ஆசையாக இருக்கிறது.