ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை நன்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.
பொதுவாக வெளிநாடுகளில் அசத்துவதற்கு அங்கு முன்னதாகவே சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும். ஆனால் இம்முறை இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் எந்தப் பயிற்சி போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக களமிறங்க உள்ளார்கள். அதனால் இந்திய அணியினர் போதுமான பயிற்சிகளை எடுக்காமல் விளையாடுவது சரியான முடிவல்ல என்று சுனில் கவாஸ்கர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
தோல்விக்கு காரணம்:
இந்நிலையில் கடந்த 7 வாரங்களில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 போட்டிகளில் விளையாடியதாக சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா அதிகப்படியான சுழலுக்கு சாதகமான மைதானத்தில் விளையாடியதாக கங்குலி கூறியுள்ளார். அதனாலேயே இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்ததாகவும் அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே இனிமேலாவது அது போன்ற பிட்ச்களை இந்தியா அமைக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவுக்கு நீங்கள் விளையாடாமல் இருந்தால் தான் சரியாக தயாராகவில்லை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்திய அணி கடந்த 7 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். எனவே அவர்களின் பயிற்சி பற்றி எப்படி கேள்வி எழலாம்”
இனியாவது நிறுத்துங்க:
“நியூஸிலாந்துக்கு எதிரான தோல்வி எதிர்பாராதது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்தத் தொடர் மிகவும் கடினமான பிட்ச்களில் நடைபெற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானங்கள் இருக்கும். இனிமேலாவது நாம் சுழலுக்கு அதிக சாதகமான பிட்ச்களில் விளையாடும் பொழுதுபோக்கை நிறுத்த வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி எப்போவும் பாகிஸ்தானுக்கு ஈடாகாது என்பது உண்மை தான்.. மைக் ஹசி பேட்டி
“அது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது நம்முடைய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை குறைந்து விடும். அது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் அட்டாக் செய்வதற்கு முன்பாக நங்கூரமாகவும் விளையாட வேண்டியிருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் நியூசிலாந்துடன் சந்தித்த தோல்வியில் இருந்து இந்தியா மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.



