இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி எப்போவும் பாகிஸ்தானுக்கு ஈடாகாது என்பது உண்மை தான்.. மைக் ஹசி பேட்டி

Mike Hussey
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் அனைவரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சவாலான ஆஸ்திரேலியாவில் காலம் காலமாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. அந்த கதையை விராட் கோலி தலைமையில் மாற்றிய இந்தியா 2018 – 19 பார்டர் – காவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவில் வென்று வரலாறு படைத்தது.

மேலும் 2020 – 21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா மோசமான சாதனை படைத்தது. ஆனால் அங்கிருந்து ரஹானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா:

அதே சமயம் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டங்களை வென்றது. மறுபுறம் தங்களுடைய பரம எதிரியான பாகிஸ்தான் சமீப காலங்களில் கொஞ்சம் பலவீன செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. அதனால் அந்த அணியை கொஞ்சம் எளிதாக இந்தியா வீழ்த்தி வருகிறது.

அதன் காரணமாக இப்போதெல்லாம் பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியா தான் இந்தியாவுக்கு உண்மையான எதிரியாக செயல்படுவதாக சௌரவ் கங்குலி கூறியிருந்தார். இந்நிலையில் என்ன தான் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இந்தியா – பாகிஸ்தான் மோதலை இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிகள் ஈடு செய்யாது என முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:

“ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு எப்போதும் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஆனால் ஆம் இந்தியா – பாகிஸ்தான் போட்டியுடன் நம்முடைய தொடரை ஒப்பிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் தனித்துவமான தொடராகும். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி எப்போதுமே மிகவும் வலுவானதாக இருக்கிறது”

இதையும் படிங்க: புஜாரா, நான் இல்லாததை அவர் பாத்துக்குவாரு.. ஆஸியில் ஜெயிக்க இந்தியா இதை செய்யனும்.. டிராவிட் அட்வைஸ்

“அதே சமயம் இந்திய அணி உலக கிரிக்கெட்டின் ரியல் பவர் ஹவுஸாக தற்போது உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த 20 – 30 வருடங்களாகவே மிகவும் வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி தற்போது நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அந்தத் தொடரில் 2 மகத்தான நாடுகளைச் சேர்ந்த அணிகள் நேருக்கு நேராக மோதுவதை அனைவரும் பார்க்க விரும்புவார்கள்” என்று கூறினார்.

Advertisement