புஜாரா, நான் இல்லாததை அவர் பாத்துக்குவாரு.. ஆஸியில் ஜெயிக்க இந்தியா இதை செய்யனும்.. டிராவிட் அட்வைஸ்

Rahul Dravid
- Advertisement -

பெர்த் நகரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. அந்த வெற்றிக்கு புஜாரா மிகவும் முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போது அவர் சுமாரான ஃபார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இல்லாதது இம்முறை இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் அனைவருமே அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். அதனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழும் போது நங்கூரமாக விளையாடி எதிரணியை கலைப்படையை வைத்து ரன்கள் குவிக்க புஜாரா போன்ற ஒருவர் தேவை என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

புஜாரா, டிராவிட் ஸ்டைல்:

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன் அல்லது அவர்களில் ஓரிருவர் பெரிய ரன்கள் குவிப்பது அவசியம் என்று ஜாம்பவான் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் தாம், புஜாரா இல்லாத சூழ்நிலையில் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி டிராவிட் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியிடம் சுப்மன் கில் இருக்கிறார்கள். அவர் சிறப்பான வீரர். கடந்த தொடரில் அவர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்பட்டார். அனைவரும் காபாவில் ரிஷப் பண்ட் அடித்த 89 ரன்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதே போட்டியில் ஐந்தாவது நாள் காலையில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் நல்ல வீரர் என்று நினைக்கிறேன். சிறந்த குழந்தை என அவர் தற்போது கற்றுக்கொண்டு வருகிறார்”

- Advertisement -

சுப்மன் கில் அசத்துவாரு:

“நான், புஜாரா போல் அல்லாமல் அவர் கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்தாலும் நல்ல பிளேயர். ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வேண்டும். அந்த நால்வரில் சிலர் சிறப்பாக விளையாடினால் இந்தியாவுக்கு இந்தத் தொடர் நன்றாக அமையும். அது நம்முடைய அணிக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய உதவியை செய்யும். இங்கே கூக்கபரா பந்துகள் பயன்படுத்தப்படும்”

இதையும் படிங்க: கவாஸ்கர் சொன்னது சரி தான்.. இந்த ஐடியாவை எல்லா இந்தியர்களும் விரும்புவாங்க.. ஹர்பஜன் பேட்டி

“அந்தப் பந்தில் இங்குள்ள சூழ்நிலைகளில் உங்களுடைய டாப் 4 பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் விளையாடி அழுத்தத்தை குறைக்க வேண்டும். அது உங்களுடைய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போட்டியை கட்டுக்குள் எடுத்து எதிரணியை டாமினேட் செய்ய உதவும்” என்று கூறினார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் 4 வெற்றிகளை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

Advertisement