
இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் துவங்கியது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா முயற்சிக்க உள்ளது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற முதலாத முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. முன்னதாக அந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியினர் வழக்கம் போல ஓவல் மைதானத்தின் பிட்ச்சை பார்வையிட்டனர். அப்போது அவர்களை தடுத்த மைதான பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் 2.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்த்துமாறு கராராக பேசினார்.
அதன் காரணமாக கோபமடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் கையை நீட்டி மிகவும் கோபமாக வாக்குவாதம் செய்தது சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் சில மைதானங்களில் பராமரிப்பாளர்கள் இப்படி கண்டிப்புடன் பேசுவது சகஜம் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதற்காக கௌதம் கம்பீர் இப்படி கோபப்பட்டு அப்செட்டாக வேண்டியதில்லை என்றும் கங்குலி கூறியுள்ளார்.
வருங்காலங்களிலும் ஏதேனும் ஒரு மைதானப் பராமரிப்பாளர் இப்படி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று கங்குலி கூறியுள்ளார். அதையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் கம்பீர் கோபப்பட வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “கம்பீர் ஏன் மிகவும் வருத்தப்பட்டார் என்பது எனக்கு உண்மையாக தெரியவில்லை”
“அனைத்து பயிற்சியாளர்களும் கேப்டன்களும் மைதானப் பேசுவார்கள். சில நேரங்களில் அந்த பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அது மகிழ்ச்சியாக இருக்காது. என்னுடைய காலங்களிலும் அது நடந்தது, வருங்காலங்களிலும் அது நடக்கும். எனவே அதை ஒரு பெரிய விஷயமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை”
இதையும் படிங்க: இந்தியா 15க்கு 15 தோல்வி.. இதுக்காக முதல்ல உங்களை தான் தூக்கனும்.. சாஸ்திரியை கலாய்த்த ஆதர்டன்
“எனவே அவற்றையெல்லாம் தாண்டி இந்தியா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். முன்னதாக அதே மைதானம் பராமரிப்பாளர் இங்கிலாந்து பயிற்சியாளர் மற்றும் வீரர்களை பிட்ச்சை மிகவும் அருகே நின்று பார்ப்பதற்காக அனுமதித்தார். அதனால் அவருடைய இரட்டை வேடத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.