கொரோனா வைரஸ் காரணமாக தனிப்படுத்திக்கொண்ட கங்குலியின் தற்போதைய நிலை தெரியுமா ? – விவரம் இதோ

Ganguly

முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கிறார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருக்கிறார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இவரது மூத்த சகோதரர் சினேகாஷிசின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும் அவரது மனைவியின் பெற்றோருக்கும் இந்த தொற்று உருவாகியது. இதன் காரணமாக அவரும் அவரது மனைவியின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கங்குலியின் மூத்த சகோதரருக்கும் இந்த வைரஸ் தொற்று தற்போது கொரோனா சோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அவர்களது பூர்வீக வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர் .இதன் காரணமாக கங்குலி தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார் .இதுகுறித்து அவர் கூறுகையில்..

ganguly family
.
எனது சகோதரருக்கு கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சல் இருந்து வந்தது மருத்துவமனையில் கொடுத்து டெஸ்ட் எடுக்கச் சொன்னார். இன்றுதான் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்று கங்குலி கூறினார்.

Ganguly 1

- Advertisement -

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தனிமையில் தனது பூர்வீக வீட்டில் இருக்கும் கங்குலிக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட டெஸ்ட்டின் முடிவில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இருப்பினும் அவர் இன்னும் சில நாட்களுக்கு தனிமையில் இருந்து ஐ.பி.எல் குறித்த வேளைகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.