இந்தியாவை அவ்ளோ குறைவா நினைக்காதீங்க.. பும்ரா, கோலி இல்லாமையே ஜெயிச்சோம்.. கங்குலி பதிலடி

Sourav Ganguly 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. இருப்பினும் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக இம்முறை 4 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் வாகன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். இந்நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் சௌரவ் கங்குலி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியை குறைத்து மதிப்பிடும் முன்னாள் வீரர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி பின்வருமாறு.

- Advertisement -

தாய் மண் இந்தியாவுக்கு ஆதரவு:

“இந்தியாவை நான் தள்ள மாட்டேன். 2021இல் நாங்கள் 36க்கு ஆல் அவுட்டான போது விராட் கோலியை இழந்தோம். காபா போட்டிக்கு செல்லும் போது ரோகித், பும்ரா, அஸ்வின் ஆகியோர் இல்லாமலேயே உயர்தரமான ஆஸ்திரேலிய அணியை நாங்கள் தோற்கடித்தோம். அந்த வகையில் இந்திய அணியில் அற்புதமான திறமை இருக்கிறது”

“அதனால் இத்தொடரின் முடிவை நான் கணிக்க மாட்டேன். ஏனெனில் கடந்த 2 தொடர்களிலும் நாங்கள் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளோம். காபாவில் 330 ரன்களை சேசிங் செய்யும் போது ஐந்தாவது நாளில் ரிஷப் பண்ட் அப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைப்பார் என்று யாராவது நினைத்தார்களா. அவரை விடுங்கள் வாஷிங்டன் சுந்தர், சர்துள் தாகூர் ஆகியோரும் வெற்றியில் பங்காற்றினார்கள்”

- Advertisement -

கங்குலி பதிலடி:

“இம்முறை முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் 1 – 1 என்ற கணக்கில் இத்தொடர் சமனில் இருக்கலாம். பின்னர் மெல்போன், பிரிஸ்பேன், சிட்னி ஆகிய மைதானங்களில் இந்த தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாம். 2018 – 19 ஆஸ்திரேலிய தொடரிலும் சிட்னி மைதானத்தில் இந்தியா வெற்றியை நெருங்கிய போது மழை வந்து தடுத்தது. இல்லையென்றால் 3 – 1 என்ற கணக்கில் நாங்கள் வென்றிருப்போம்”

இதையும் படிங்க: 150 வருட இங்கிலாந்து வரலாற்றை இந்தியா நெருங்க கூட முடியாது.. மைக்கேல் வாகன் காட்டம்

“இந்திய அணியில் சில பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இந்தத் தொடர் மிகவும் அற்புதமானதாக இருக்கும். வானிலை வழி விட்டால் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் முடிவு கிடைக்கும். அது எந்த வகையிலும் செல்லலாம்” என்று கூறினார். அந்த வகையில் குறைத்து மதிப்பிடும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வெல்ல வேண்டும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement