ஐபிஎல் தொடரில் இவர் தான் இரட்டை சதம் அடிப்பார்…கங்குலி நம்பிக்கை – யார் தெரியுமா ?

Sachin
- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி மொத்தம் 176 போட்டிகளில் 8227 ரன்களை குவித்து சாதனை செய்தவர்கள்.இருவரும் புதன்கிழமை கங்குலி எழுதிய “A Century Is Not Enough” புத்தகவிழாவில் சச்சின் மற்றும் ரோகித்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ganguly1

- Advertisement -

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சச்சின் பழைய நினைவுகளை பற்றி பகிர்ந்து கொண்டார். பின்னர் பேசிய ரோகித்சர்மாவும் கங்குலியை பற்றி புகழ்ந்து பேசினார்.இறுதியாக பேசிய கங்குலி ரோகித்சர்மா விரைவில் 20ஓவர்கள் போட்டியில் இரட்டை சதமடிக்க போகும் அந்த நாளை காண ஆவாலோடு எதிர்நோக்கியுள்ளேன் என்றார்.

ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ரோகித்சர்மா 20ஓவர்கள் போட்டியிலும் இரட்டை சதமடிப்பார் என்றார்.மேலும் கங்குலி தனது பயிற்சியாளரான கிரேக் சேப்பலை பற்றியும் நினைவுகூர்ந்தார்.

மேலும் பேசிய கங்குலி “வெற்றியென்பது தோல்விகளின் போதும், கடினமான சூழல்களின் போதும் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே உள்ளது. அணியில் இருந்து ஒதுக்கப்படும் போது கடுமையான பயிற்சியினால் மீண்டு வந்தேன். மீண்டும் அணிக்கு திரும்பியபோது முன்பைவிட மனதை திடமாக வைத்திருந்தேன். நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் கடைசியாக விளையாடிய 4வருடங்கள் தான் நான் விளையாடியதிலேயே சிறந்த காலக்கட்டம் என சச்சின் அடிக்கடி கூறுவார்” என்றார்.

Advertisement